இயக்குநர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'கடமையை செய்'. இப்படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியானது.
'கடமையை செய், கடவுளே கொடுப்பான் கை..!' : எஸ்.ஜே.சூர்யாவின் 'கடமையை செய்' சிங்கிள் ரிலீஸ்
நடிகர் எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கடமையை செய்' திரைப்படத்தின் பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
’கடமையை செய், கடவுளே கொடுப்பான் கை..!’ : எஸ்.ஜே.சூர்யாவின் கடமையை செய் சிங்கிள் ரிலீஸ்
இந்நிலையில், இப்படத்தின் பாடல் வீடியோ தற்போது அப்படக்குழுவினரால் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 'கடமையை செய்' எனும் இப்பாடலை பாடலாசிரியர் அருண் பாரதி எழுதியுள்ளார். இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'அண்ணாத்தே' திரைப்படத்தில் இடம்பெற்ற 'வா சாமி' என்ற பாடலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனுஷ் படத்தில் பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் இதுவா?