தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள்...  விஜய் படம் குறித்து லோகேஷ் கனகராஜ்... - தளபதி 67

விஜய் உடனான தனது அடுத்த படம் குறித்து, தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடனேயே இதுகுறித்து நான் பேச முடியும் என்று இயக்குரநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இன்னும் கொஞ்சநாள் தான் காத்திருங்கள் - விஜய் படம் குறித்து லோகேஷ் கனகராஜ்!
இன்னும் கொஞ்சநாள் தான் காத்திருங்கள் - விஜய் படம் குறித்து லோகேஷ் கனகராஜ்!

By

Published : Jul 30, 2022, 6:05 PM IST

சென்னையில் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் இன்று (ஜூலை 30) நடைபெற்ற விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "விக்ரம் பட வெற்றிக்குப் பிறகு இப்போதுதான் அடுத்த படத்திற்கான‌ எழுத்து வேலையில் ஈடுபட்டுள்ளேன்.

இந்த படத்தின் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிய பின்னரே நான் இதுகுறித்து பேச முடியும். ரஜினி உடன் படம் பண்ண உள்ளதாக வந்த தகவலை நானும் அறிந்தேன். அவ்வளவு சுலபமாக எல்லாம் அது நடந்துவிடாது. அப்படி நடந்தால் சந்தோஷம்தான். அனைத்து நடிகர்களுடனும் படம் இயக்க ஆசை. அஜித், ரஜினி உடனும் பணியாற்ற ஆசை எல்லாவற்றையும் காலம் தான் முடிவு செய்யும்" என்றார்.

இதையும் படிங்க:'வெந்து தணிந்தது காடு' டப்பிங் பணிகளை முடித்த சிம்பு!

ABOUT THE AUTHOR

...view details