ஹைதராபாத்: பிரபல திரைப்பட நடிகை அதிதி ராவ் ஹைதரியும், நடிகர் சித்தார்த்தும் ஒருவருக்கோருவர் காதலித்து வருவதாக ரசிகர்கள் தரப்பில் வதந்திகள் பகிரப்பட்டு வருவது வழக்கம். குறிப்பாக அவர்கள் இருவரும் இணைந்து சமூக வலைத்தளங்களில் பதிவிடும் பதிவுகளில், அவர்களுக்கு மத்தியில் இருக்கும் கெமிஸ்ட்ரி ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் இருக்கும்.
அதனால் தான் என்னவோ இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காதலிப்பதாக, ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு மத்தியில் இருக்கும் உறவை குறித்து, இவர்கள் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வரவில்லை.
இதனிடையே, நாளை (நவ. 28) ஹாட்ஸ்டாரில் (Hotstar) வெளியாக ஒளிபரப்பாக இருக்கும் சித்தார்த் நடித்த 'சித்தா' படத்தின் புரமோஷனுக்காக, சித்தார்த்தின் மற்ற படங்களில் இருந்து சிறந்த காட்சிகளைத் தொகுத்து ரீல்ஸாச ஹாடஸ்டார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தது.
அதை குறிப்பிட்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அதிதி ராவ் ஹைதரி, "ஜஸ்ட் லுக்கிங் லைக் எ வாவ் (Just looking like a wow)" என்கிற டிரெண்டிங்கான சொல்லை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு ரசிகர்கள் தங்களது லைக்குகளை அதிகம் பகிர்ந்து, அவர்களுக்கு மத்தியில் இருக்கும் கெமிஸ்ட்ரியை ரசிக்கும் வகையில் கமெண்டுகளையும் பதிவிட்டு இருந்தனர்.