சென்னை:நடிகர் ரியோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து, பின்னர் சின்னத்திரை நடிகரானவர். அங்கு இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமாகி, தமிழ் சினிமாவிலும் நடிகராக நுழைந்தார். பின்னர் 2019ஆம் ஆண்டு வெளியான 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுத் தந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ‘ஜோ’ என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் மாளவிகா மனோஜ், பாவ்யா ட்ரிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி, இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. காதல் படமான இதில், சித்து குமாரின் பாடல்கள் ரசிக்க வைத்தது. மேலும் இப்படத்தில் சார்லி, அன்புதாசன் மற்றும் ஏகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.