சென்னை: 2019ஆம் ஆண்டு விஜே கோபிநாத் இயக்கத்தில், நடிகர் வெற்றி நடிப்பில் வெளியான படம் 'ஜீவி'. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. பல்வேறு விருதுகளையும் குவித்தது.
இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்தை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த வெற்றியே இதிலும் நடித்துள்ளார். சமீபகாலமாக தனது வித்தியாசமான படங்களின் மூலம் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்து வருகிறார் வெற்றி.