மும்பை: பாலிவுட் நடிகை ஜியா கானின் தற்கொலை வழக்கை மறு விசாரணை செய்ய அவரது தாயார் ரபியா கான் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் மத்திய புலனாய்வு முகமையின் விசாரணை திருப்பதிகரமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பாலிவுட் நடிகை ஜியா கான் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு தற்கொலைக்கு அவரது காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி தான் காரணம் என்று ஜியா கானின் தாயார் ரபியா கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதோடு தனது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை கொலை செய்யப்பட்டார் என்றும் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழக்கில் விசாரணை நடத்திய போலீசார் தற்கொலை என்று உறுதி செய்தனர். ஆனால் போலீசார் குளறுபடி உள்ளதாகவும், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் ரபியா கான் மனு தாக்கல் செய்தார். அதன்படி மும்பை நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றியது. சிபிஐ பல்வேறு கட்ட விசாரணை நடத்தி ஜியா கான் வழக்கு கொலையல்ல, தற்கொலையே என்று அறிக்கை தாக்கல் செய்தது.