தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Jawan box office: உலக அளவில் 400 கோடி வசூலை நெருங்கும் ஜவான்!! - ஜவான் விஜய் சேதுபதி

Jawan box office collection: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் திரைப்படம் உலக பாக்ஸ் ஆபிஸீல் 400 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 4:47 PM IST

ஹைதராபாத்: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துக் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜவான். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சஞ்சய் தத் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஜவான் திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.

படம் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. ஜவான் வெளியாகி கடந்த ஒரு வாரத்தில் இந்திய பாக்ஸ் ஆபிஸில் 350 கோடி வரை வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் ஜவான் திரைப்படம் 600 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஜவான் படம் வெளியான முதல் நாளில் இந்திய அளவில் 75 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், இரண்டாவது நாளில் 53.23 கோடியும், மூன்றாவது நாளில் 77.83 கோடியும் வசூல் செய்தது.

நான்காவது நாளில் 80 கோடி வசூல் செய்து ஒரே நாளில் அதிக வசூல் செய்த இந்தி திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது. ஜவான் படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் வசூலில் சரிவை சந்தித்துள்ளது. நேற்று இந்திய அளவில் 19.36 கோடி மட்டுமே வசூல் செய்தது. உலக அளவில் 387.74 கோடி வசூல் செய்தது.

இந்நிலையில் ஜவான் படத்தில் நயன்தாராவுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிரபல ஐஎம்டிபி இணையதளத்தில் இந்திய பிரபலங்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். ஐஎம்டிபி இந்த வாரம் வெளியிட்ட வரிசையின் படி ஷாருக்கானை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த வாரம் ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்ட பிரபலங்கள் வரிசையில் மூன்றாவது இடத்திலிருந்த நயன்தாரா இந்த வாரம் முதலிடம் பிடித்துள்ளார். இந்த வரிசையில் இயக்குநர் அட்லீ மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

Also read:Jawan box office collection: Numbers likely to decline over 20% for Shah Rukh Khan starrer on day 7

ABOUT THE AUTHOR

...view details