சென்னை:ஜூலை 17 ஆம் தேதி ஜெயிலர் படத்தின் அடுத்த பாடல் வெளியாக உள்ள தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. தற்போது அப்பாடலின் முன்னோட்டத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, "இங்க நான் தான் கிங்.., நான் வச்சது தான் ரூல்ஸ்" என மிரட்டலான கூரலில் பேசிய வசனங்கள் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Jailer Update: இங்க நான் தான் கிங்.. நான் வச்சது தான் ரூல்ஸ்.. ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட்! - ஜெயிலர் அப்டேட்
ஜூலை 17 ஆம் தேதி வெளியாக உள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாடல் குறித்த முன்னோட்டத்தை வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்
Etv Bharat
முன்னதாக இன்று காலை சன் பிக்சர்ஸ் நிறுவனம், "ஒரு சின்ன preview-க்கு ready-ஆ" என்று ரஜினிகாந்த்தின் புகைப்படத்தோடு பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜெயிலர் படம் குறித்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.