தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஜெய்பீம் நடிகர் மணிகண்டனின் 'குட் நைட்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு - tamil cinema updates

நடிகர் மணிகண்டன் நடித்துவரும் 'குட் நைட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்

ஜெய்பீம் மணிகண்டன் நடித்துவரும் 'குட் நைட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
ஜெய்பீம் மணிகண்டன் நடித்துவரும் 'குட் நைட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By

Published : Feb 11, 2023, 2:05 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் எழுத்தாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் மணிகண்டன். ஜெய் பீம் திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. நடிகராக மட்டும் இல்லாமல் 'நரை எழுதும் சுயசரிதம்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அது மட்டுமின்றி விக்ரம் வேதா மற்றும் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.

சில்லு கருப்பட்டி, ஏலே, சில நேரங்களில் சில மனிதர்கள், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களில் இவரது தனித்துவமான கதாபாத்திர தேர்வு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. இப்போது மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'குட் நைட்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கும் இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

காதல் மற்றும் காமெடி கலந்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம். ஆர். பி என்டர்டெய்ன்மெண்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''குறட்டையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவமும் இடம் பிடித்திருக்கிறது. தூங்கும் போது ஒருவர் விடும் குறட்டை, எப்படி மற்றவர்களை பாதிக்கிறது என்பதை நகைச்சுவையாகவும், அர்த்தமுள்ள கதையாகவும் உருவாக்கி இருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் விஜயின் 'வாரிசு ஓடிடி ரிலீஸ்'... எப்போது தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details