தமிழ் சினிமாவில் தனி கதாநாயகன், இன்னொரு கதாநாயகனுடன் சேர்ந்து நடிப்பது, பல நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடிப்பது எனப் பல படங்களில் பார்த்து ரசித்த நடிகர் ஜெய் கூடிய விரைவில் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
ராகுல் ஃபிலிம்ஸ் புரொடக்ஷன் சார்பாக தயாரிப்பாளர் கே.திருக்கடல் உதயம் படத்தைத் தயாரிக்க, சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘BREAKING NEWS’ . இந்தப் படத்தில் நடிகர் ஜெய் நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடிகர் ஜெய் ரோபோக்களுடன் சண்டையிடும் ஆக்ஷன் காட்சிகள் மிக பிரம்மாண்டாகவும் அற்புதமாகவும் படமாக்கி உள்ளனர்.