மும்பை: நடிகை காஜல் அகர்வால், தொழில் அதிபரான கௌதம் கிச்லு என்பவரை 2020ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
இந்த ஜோடிக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவல் காஜல் அகர்வாலின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதில், “காஜல் அகர்வாலுக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.19) ஆண் குழந்தை பிறந்தது. தாயும்-சேயும் நலமாக உள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஜல் அகர்வால் கர்ப்பிணியாக இருந்த நிலையில் பிரபல தமிழ் படத்தில் இருந்து விலகினார். காஜல் ஏற்கனவே அஜித், விஜய், சூர்யா மற்றும் தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இதையும் படிங்க : ராஜஸ்தான் நீச்சல் குளத்தில் காஜல் அகர்வால்!