தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

என்னது வாடிவாசலும் ட்ராப்பா? என்ன செய்கிறார் சூர்யா?! - surya 42

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள "வாடிவாசல்" (vadivasal) படமும் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

surya
என்னது வாடிவாசலும் ட்ராப்பா

By

Published : Dec 23, 2022, 8:39 PM IST

சென்னை:நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்து வந்தார். ஆனால், சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட இயக்குநர் பாலா, வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார் என்று தெரிவித்து இருந்தார். இது சூர்யா ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே தற்போது சிவா இயக்கத்தில் 'சூர்யா 42' படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் தாணு தயாரிக்கும் வாடிவாசல் படத்தில் நடிப்பதற்காக சூர்யா தன்னை தயார்படுத்தி வந்தார். ஆனால், வெற்றிமாறனின் விடுதலை படமே இன்னும் முடிந்தபாடில்லை. அதனால் கடுப்பான சூர்யா, சிவா படத்துக்காக இரண்டு ஆண்டுகள் ஒதுக்கிவிட்டார். இதனால், வாடிவாசல் எப்போது தொடங்கும் என்று கேள்விக்குறியாகியுள்ளது.

சிவா படம் முடியவே 2 ஆண்டுகள் ஆகும் என்ற நிலை உள்ளநிலையில் வாடிவாசலுக்கு கால்ஷீட் தற்போது தரமுடியாத நிலையில் சூர்யா உள்ளார். வெற்றி மாறனும் ’விடுதலை’ முடிந்து கமல் அல்லது விஜய் படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, வாடிவாசல் இப்போது திறக்க வாய்ப்பில்லை என்கின்றனர்.

இதையும் படிங்க: சினேகா - பிரசன்னா தம்பதிகளின் கலக்கல் புகைப்படங்கள்

ABOUT THE AUTHOR

...view details