சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு மகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்த ஜனனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜய்யை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். அப்படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 67" (Thalapathy 67) என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் த்ரிஷா, மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் உள்ளிட்டப் பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.