தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அற்புதம்மாள் வாழ்க்கையை படமெடுக்கிறாரா வெற்றிமாறன்..? - அற்புதம்மாள்

அற்புதம் அம்மாள் வாழ்க்கையை படமெடுப்பதாகக் கூறியிருந்த இயக்குநர் வெற்றி மாறனை அதை எடுக்க ஒரு தயாரிப்பு நிறுவனம் அணுகியதாக தகவல்கள் கசிந்துள்ளது.

அற்புதம்மாள் வாழ்க்கையை படமெடுக்கிறாரா  வெற்றிமாறன்..?
அற்புதம்மாள் வாழ்க்கையை படமெடுக்கிறாரா வெற்றிமாறன்..?

By

Published : May 19, 2022, 6:31 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகள் சிறை வாசத்திற்குப் பிறகு பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரது அம்மா அற்புதம்மாளின் இத்தனை ஆண்டுகாலப் போராட்டத்திற்குக்1 கிடைத்த வெற்றி எனப் பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், அற்புதம்மாளின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்க விரும்புவதாக இயக்குநர் வெற்றிமாறன் ஏற்கெனவே தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இதுகுறித்து வெற்றிமாறனிடம் ஒரு தயாரிப்பு நிறுவனம் தங்கள் கம்பெனி சார்பில் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தாங்கள்தான் இயக்க வேண்டும் என்றும் அணுகியுள்ளனர்.

ஆனால், அதனை நிராகரித்த வெற்றிமாறன் தன் சொந்த நிறுவனத்தின் சார்பில் ஒரு ஓடிடி தளத்துக்காக எடுக்க யோசித்து வருவதாகக் கூறியுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய வெற்றிமாறன், ”பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாளின் வாழ்க்கையைப் படமாக்க ரொம்ப மும்முரமாக அதில் வொர்க் பண்ணிட்டு இருக்கிறேன். இதில் ஒரு தாயின் போராட்டம், நாட்டினுடைய வரலாறும் இருக்கிறது. 32 காலமாக நடக்கும் ஒரு அம்மாவுடைய போராட்டத்தைக் காட்சிப்படுத்துவது ரொம்ப சவாலானது.

அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அற்புதம்மாள் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை கூட முடிவு பண்ணி வைத்திருக்கிறேன். சீக்கிரம் சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். ஆனால், வெற்றிமாறன் தற்போது இருக்கும் பிஸியான நேரத்தில் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

இதையும் படிங்க: இந்தியாவில் முதல் முறையாக கேரள அரசின் OTT தளம்

ABOUT THE AUTHOR

...view details