தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Maaveeran first single: 'மாவீரன்‌' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதுவா? - மாவீரன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Maaveeran first single: 'மாவீரன்‌' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதுவா?
Maaveeran first single: 'மாவீரன்‌' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதுவா?

By

Published : Feb 15, 2023, 8:37 PM IST

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிரின்ஸ். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். இவர் யோகி பாபு நடித்து வெளியான மண்டேலா படத்தை இயக்கியவர். மேலும் மண்டேலா படத்துக்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது பெற்றார்.

இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து "மாவீரன்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இப்படத்தில் நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு சமயத்தில் இயக்குநருக்கும், சிவகார்த்திகேயனுக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும் இதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் தயாரிப்பு தரப்பு இதனை மறுத்து வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு சுமூகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வருகின்ற 17ஆம் தேதி அதாவது சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கிளிம்ஸ் இன்று வெளியிடப்பட்டது. பரத் சங்கர் இசையில் ’சீன் ஆ சீன் ஆ’ என்ற மரண மாஸ் குத்துப்பாடல் வரும் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Celebrity Cricket League: எட்டு திரையுலகம் களம்காணும் கிரிக்கெட் போட்டி

ABOUT THE AUTHOR

...view details