சென்னை:'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடித்து வரும் படம் 'தி பாய்ஸ்'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து இன்று வெளியிட்டுள்ளனர்.
இந்தத் திரைப்படத்தில் சந்தோஷுடன் 'ஜெயிலர்' ஹர்ஷத், 'கலக்கப்போவது யாரு' வினோத், ஷா ரா, யுவராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அஹமத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண் மற்றும் கௌதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
சாம் ஆர் டி எக்ஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை முஜிபீர் ரஹ்மான் கவனித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் முற்றிலும் வித்தியாசமான முயற்சியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை நோவா ஃபிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் E. செந்தில்குமார் தயாரித்திருக்கிறார்.
இவருடன் இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமாரின் சொந்த பட நிறுவனமான டார்க் ரூம் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் இப்படத்தை இணைந்து தயாரித்திருக்கிறார். படத்தை பற்றி சந்தோஷ் பி. ஜெயக்குமார் பேசுகையில், “ஐந்து இளம் பேச்சுலர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் 'தி பாய்ஸ்' படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.