தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஜோஜு ஜார்ஜின் 'இரட்டா' - கேரளாவிற்கு வெளியிலும் வெளியானது! - இரட்டா படத்தின் விமர்சனம்

ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘இரட்டா’ திரைப்படம் கேரளாவில் வெளியாகிய நிலையில் இன்று (பிப்.17) முதல் வெளி மாநிலங்களிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 17, 2023, 3:29 PM IST

ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'இரட்டா'. இப்படத்தை அறிமுக இயக்குநர் ரோஹித் எம்ஜி கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இரட்டை சகோதரர்களான வினோத் மற்றும் பிரமோத் ஆகியோரின் கதையை கூறும் இப்படம் பல சஸ்பென்ஸ்களுடன் ஒரு சிறந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.

இப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜோஜு ஜார்ஜ், தனது கெரியரில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘இரட்டா’. சஸ்பென்ஸ் காட்சிகள் மற்றும் எதிர்பாராத க்ளைமாக்ஸ் கொண்ட இப்படம் இன்று (பிப் 17) முதல் வெளி மாநிலங்களிலும் வெளியாகியுள்ளது.

மற்ற படங்களில் இருந்து 'இரட்டா' வித்தியாசமானதாகவும், இதுவரை நாம் பார்த்த போலீஸ் கதையோ, காவல் நிலையம் சார்ந்த படமோ இது இல்லை என படக்குழுவினர் கூறுகின்றனர். மேலும், இப்படத்தின் கதாநாயகியாக தமிழ், மலையாள நடிகை அஞ்சலி நடித்துள்ளார். ஜோஜு ஜார்ஜின் ‘அப்பு பாத்து பப்பு’ புரொடக்ஷன்ஸ், ‘மார்ட்டின் பிரகாட்’ பிலிம்ஸ் மற்றும் சிஜோ வடகன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

ஜோஜு ஜார்ஜ் தனது கதாபாத்திரங்களில் சிறந்து விளங்கும் நடிகராவார். இவர், தமிழ்ப்படமான 'ஜகமே தந்திரம்' படத்தில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளார். ஜோஜு ஜார்ஜின் கேரியரில் 'இரட்டா' படம் இன்னொரு திருப்புமுனை என்பதில் சந்தேகமே இல்லை. படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்ரிந்தா, ஆர்யா சலீம், ஸ்ரீகாந்த் முரளி, சாபுமோன், அபிராம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஜோஜு ஜார்ஜின் 'இரட்டா'

இப்படத்தின் ஒளிப்பதிவை விஜய் கையாண்டுள்ளார். மேலும், அன்வர் அலியின் பாடல் வரிகளுக்கு ஜேக்ஸ் பிஜோ இசையமைத்துள்ளார். மனு ஆண்டனி இப்படத்திற்கு எடிட்டராகப் பணியாற்றி உள்ளார். மேலும், கலை திலீப் நாத், ஆடை வடிவமைப்பு சமீரா சனீஷ், ஒப்பனை ரோனெக்ஸ், சங்கதானம் கே ராஜசேகர், மார்க்கெட்டிங் & மீடியா பிளான் அப்ஸ்குரா ஆகியோர் இணைந்து இப்படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். இப்படம் கேரளாவில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் மற்ற மாநிலங்களில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதையும் படிங்க:Vaathi: தனுஷின் 'வாத்தி' திரைப்படம் வெளியானது!

ABOUT THE AUTHOR

...view details