தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சர்வதேச விருதுகளை பெற்ற குழலி ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Kuzhali Release Date Announcement

சர்வதேச அளவில் விருதுகளை பெற்ற குழலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

குழலி ரிலீஸ் தேதி அறிவிப்பு
குழலி ரிலீஸ் தேதி அறிவிப்பு

By

Published : Sep 17, 2022, 7:38 AM IST

முக்குழி மூவிஸ் வழங்கும் ஜெயராமன் தயாரிப்பில் கலையரசன் இயக்கியுள்ள திரைப்படம் 'குழலி'. இப்படத்தில் 'காக்கா முட்டை' விக்னேஷ் நாயகனாகவும் ஆரா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுத்து சிறந்த திரைப்படத்திற்கான விருது , விமர்சன ரீதியான திரைப்படத்திற்கான விருது , பின்னணி இசைக்கான விருது , சிறந்த நடிகைக்கான விருது என 16 விருதுகளை பெற்றது.

இப்படம் வரும் 23ஆம் தேதி அன்று திரைக்கு வர இருக்கிறது. "குழலி" திரைப்படம் முற்றிலும் கிராமத்து எதார்த்த முகங்களோடு திரைப்படமாக உருவாகி உள்ளது .

இப்படத்திற்கு உதயகுமார் என்பவர் இசையமைக்க, கார்த்திக் நேத்தா , தனிக்கொடி , ராஜாகுருசாமி மற்றும் ஆக்னஸ் தமிழ்செல்வன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

இதையும் படிங்க: 'பிக்பாஸ் பிரபலம்' ரம்யா பாண்டியன் புகைப்படத் தொகுப்பு

ABOUT THE AUTHOR

...view details