தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

3 நாட்களில் குற்றச்சாட்டினை வாபஸ் பெற வேண்டும்... அமீருக்கு கெடு விதித்த மோகன் ஜி!! - tamil cinema news

இயக்குநர் அமீர் என் மீதும் என் படத்தின் மீதும் வைத்த குற்றச்சாட்டினை இன்னும் மூன்று தினங்களில் நிரூபிக்க வேண்டும் அல்லது அவர் தெரிவித்த கருத்தில் இருந்து பின்வாங்க வேண்டும் என பகாசூரன் படத்தின் இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 24, 2023, 6:46 PM IST

3 நாட்களில் குற்றச்சாட்டினை வாபஸ் பெற வேண்டும்... அமீருக்கு கெடு விதித்த மோகன் ஜி!!

சென்னை: இயக்குநர் மோகன் ஜி, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கியதன்‌ மூலம் சர்ச்சை இயக்குநர் என்ற பெயர் எடுத்தவர். இவர் செல்வராகவன், நட்டி நடிப்பில் பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான பகாசூரன் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. பெண் குழந்தைகளுக்கு செல்போனால் ஏற்படும் பிரச்னைகளை கதைக்கருவாக கொண்டு படமாக எடுத்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குநர் அமீர், மோகன் ஜி குறித்து பேசியதில், 'மோகன் ஜி யின் படங்கள் இந்துத்துவா கொள்கையை முன்வைக்கின்றன. இவரது படங்களுக்கு எச்.ராஜா, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை போன்றோர் பின்னணியில் இருந்து உதவுகின்றனர்' என்று கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் மோகன் ஜி அமீரின் கருத்துக்கு விளக்கமளித்துள்ளார்.

''எனது நான்காவது திரைப்படமான பகாசூரன் இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிறைய நல்ல கருத்துகளும் வந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் இயக்குநர் அமீர் பகாசூரன் படத்தைப் பார்க்காமல் தவறான கருத்தை தெரிவித்து வருகிறார். படம் திரையங்கில் ஓடிக்கொண்டிருக்கும்போது இதுபோன்று கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம்.

நான் யாரிடமும் பணம் வாங்கி இந்தப் படத்தை இயக்கவில்லை. கடன் வாங்கித்தான் படத்தை இயக்கியுள்ளேன்.
படத்திற்கு நானே தான் தயாரிப்பாளர். நான் எந்த கட்சியைச் சார்ந்தவர்களிடமும் பணத்தை வாங்கி படம் எடுக்கவில்லை.

இயக்குநர் அமீர் இதுபோன்ற தவறான குற்றச்சாட்டினை வைக்க வேண்டாம். இந்த பகாசூரன் படத்தினை அனைத்து தரப்பினரையும் பார்க்கத்தான் அழைத்தேன். ஆனால், தேவை இல்லாமல் படத்தை பார்க்காமல் தவறான கருத்துகளை கூற வேண்டாம். இன்னும் மூன்று நாட்களில் அமீர் தனது கருத்தினை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும்; இல்லையெனில் உரிய ஆதாரத்தை காண்பிக்க வேண்டும்'' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ''பகாசூரன் படத்திலும் நான் பெண்கள் தொலைபேசி பயன்படுத்தக்கூடாது என்று நான் கூறியிருப்பதாக தவறான கருத்தை முன்வைப்பதாகப் பதிவு செய்து வருகின்றனர். அண்ணாமலை தவிர்த்து மற்றவர்களும் என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பகாசூரன் படத்தில் நான் இந்துத்துவாவையும் சாதியையும் வைத்து படம் எடுக்கவில்லை. பகாசூரன் பெற்றோர்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான சிறந்த படம். நான் சொல்வதை மட்டும் கருத்தாக வைத்துக் கொள்ள வேண்டும், தேவையில்லாத தவறான கருத்துப் பதிவுகளை யாரும் பரப்ப வேண்டாம். நல்ல கருத்துகளை மக்களுக்கு சொல்லவே நான் கடன் வாங்கி படம் எடுத்து அதிகம் கஷ்டப்படுகிறேன்'' எனக் கூறினார்.

இதையும் படிங்க: 16 years of Karthism: பருத்திவீரன் வெளியாகி 16 ஆண்டுகள் கடந்ததை முன்னிட்டு ரசிகர்கள் கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details