இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக நடிகர் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இணைந்து இவரது படத்தில் பணியாற்ற உள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டன.
இதனையடுத்து, தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் தனது தம்பி மகனான இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு, இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். அந்தக் காணொலியில் தெலுங்கிலேயே பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார், இளையராஜா.