நடிகர் கமல்ஹாசன் நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் மாபெரும் வசூல் சாதனைப் படைத்துள்ளது.
இதனையடுத்து, அப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் அப்படக்குழுவினரால் நடத்தப்பட்டது. இந்த வெற்றியையடுத்து பல திரை நட்சத்திரங்கள் கமலை நேரில் சந்தித்து விக்ரம் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கமலை வாழ்த்திப் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் ச-கோ-த-ர-ரே!!! மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது. விக்ர மாமுகம் தெரியுதே - அது வெற்றிப் புன்னகை புரியுதே! என மாற்றிக் கொள்ளலாம்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் - ரஜினி