சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு ஒரு புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா குறிப்பிட்டிருந்தது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது.
பலர் இந்தக்கருத்தை எதிர்த்து சமூக வலைதளங்களிலும் விவாதங்களிலும் இளையராஜாவை விமர்சித்தனர். பாஜக ஆதரவாளர்கள் இளையராஜாவை சமூக வலைதளங்களில் ஆதரித்து, அவரின் கருத்தை வரவேற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று(ஏப்.22) பிரதமர் நரேந்திர மோடி இளையராஜாவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின.
யாரைக் குறிப்பிடுகிறார் ராஜா..?:இதனையடுத்து, நேற்று(ஏப் 21) இளையராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் பாட்டு ஒன்றை தன் குரலில் பாடி பதிவிட்டுள்ளார். ’தளபதி’ திரைப்படத்தில் வரும் ’சுந்தரி கண்ணால் ஒரு செய்தி..!’ என்ற பாடலின் வரிகளை சற்று மாற்றி 27 நொடிகள் பாடியுள்ளார், ராஜா.
அதில், ”நான் உனை நீங்க மாட்டேன்..., நீங்கினால் தூங்க மாட்டேன்.., பாடுவேன் உனக்காகவே.., இந்த நாள் நன்னாள் என்று பாடு.., என்னதான் இன்னுமுண்டு கூறு..!;” என்று வரிகளை சற்று மாற்றிப் பாடியுள்ளார். இதன் மூலம் “பாடுவேன் உனக்காகவே” என்று ராஜா யாரைக் குறிப்பிடுகிறார் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலர் அவரவர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' ரிலீஸ் தேதி மாற்றம்!