சென்னை: மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் தடகள வீராங்கனை பி.டி. உஷா, கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே, இயக்குனர் ராஜமவுலியின் தந்தையும், திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத் உள்ளிட்டோரும் மாநிலங்களவை நியமன எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, இளையராஜாவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், "இளையராஜா கலைச் சாதனையை கௌரவிக்க வேண்டும் எனில் ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும், மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.