தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சீனு ராமசாமி, GV பிரகாஷ் கூட்டணியில் உருவாகியுள்ள 'இடி முழக்கம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! - hbd gvprakash

GV பிரகாஷ் குமார்-காயத்திரி நடிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், உருவாகியுள்ள “ இடிமுழக்கம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது.

GV.பிரகாஷ், சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகியுள்ள ”இடிமுழக்கம்” ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு
GV.பிரகாஷ், சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகியுள்ள ”இடிமுழக்கம்” ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு

By

Published : Jun 13, 2022, 5:01 PM IST

தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் GV.பிரகாஷ் குமார் மற்றும் காயத்திரி முக்கிய வேடங்களில் நடிக்க, Skyman Films International கலைமகன் முபாரக் தயாரிப்பில் உருவாகி வரும் ‘இடிமுழக்கம்’ திரைப்படம் தொடங்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடம் பெரும் ஆவலை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் GV.பிரகாஷின் பிறந்தநாளான இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனித்துவமான கதைக்கருவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தோற்றத்தை தரும் இப்படத்தை பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இப்படத்தில் NR ரகுநந்தன் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்வரிகளை எழுதுகிறார். GV. பிரகாஷ் குமார், காயத்திரி தவிர சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் மற்றும் பல திறமையான நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க:சீரியலில் நடித்திருக்கும் சத்யராஜ்! காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details