தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'இதுபோன்ற படம் இயக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன்' - சந்தோஷ் பி ஜெயக்குமார்! - பொய்க்கால் குதிரை

இது போன்ற படங்களை இயக்கத் தான் சினிமாவுக்கு வந்ததாக இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

'இதுபோன்ற படம் இயக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன்' - சந்தோஷ் பி ஜெயக்குமார்!
'இதுபோன்ற படம் இயக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன்' - சந்தோஷ் பி ஜெயக்குமார்!

By

Published : Jul 23, 2022, 7:59 PM IST

இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா, வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள ’பொய்க்கால் குதிரை’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று(ஜூலை 23) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் பிரபுதேவா, வரலட்சுமி சரத்குமார், இமான் தயாரிப்பாளர் வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார், “இதுபோன்ற படம் இயக்க வேண்டும் என்று நினைத்தேன். ’கஜினி காந்த்’ ரீமேக் படம் என்பதால் எனது படம் போல் இல்லாமல் போனது. ’கஜினிகாந்த்’ படத்தில் எனக்கு ஆர்யா என்ற நல்ல நண்பன் கிடைத்தார்.

இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிரபுதேவாவுக்கு நன்றி. யாரிடம் பேச‌ வேண்டும் என்று ஆர்யாவிடம் கேட்டாலும் அவரிடம் தொடர்பு எண் கிடைக்கும். இப்படத்தை பற்றி சொல்வதை விட நீங்கள் பார்த்தால் நல்லது. இது எனது நார்மலான படம்” என்றார்.

நடிகர் பிரபுதேவா பேசுகையில், “ இமான் இசை அமைப்பாளர் மட்டுமல்ல, நல்ல மனிதநேயம் உள்ள மனிதர். இப்படத்தில் ஒற்றைக்காலில் ஆட வேண்டும் என்ற‌ சவால் இருந்தது. ஆனால் மிகவும் கஷ்டப்பட்டு ஆடினேன். இப்படம் எடிட்டிங் மிகவும் கடினம். இப்படத்தில் இடது காலை மடக்கி நடித்ததால் வலது காலில் வலி ஏற்பட்டது.

சமீபகாலமாக அழுத்தமான கதைகளில் நடிப்பது எதனால் என்றால் முதிர்ச்சியினால் தான். இவ்வளவு நாள் நடிக்கிறோம் அதுவும் இல்லாமல் இளம் இயக்குனர்கள் புதுசாக கதை சொல்கிறார் அதான். குழந்தைகள் உடன் படம் நடிப்பது தானாக அமைந்தது. மேலும் எனக்கும் அதுதான் பிடிக்கிறது. இனிமேல் மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க முடியாது" என்றார்.

இதையும் படிங்க: ’வருகிறான் சோழன்’ : ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் காட்சிக்கு பின்னால்..!

ABOUT THE AUTHOR

...view details