சென்னை: செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் கட்டா குஸ்தி படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தெலு ங்கு நடிகர் ரவிதேஜா, உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நான் நிறைய பேசப் போவதில்லை நான் பேசினால் நிறைய உண்மைகளை சொல்லி விடுகிறேன் அதனால் பிரச்சனை ஆகி விடுகிறது. விஷ்ணு எனக்கு சீனியர், நீர்ப்பறவை படத்தின் போது நான் வெறும் தயாரிப்பாளர் தான். ரிலீஸ் முன்பு தான் படத்தை காட்டுவார்கள். முன்னதாக காட்டினால் நான் ஏதாவது மாற்ற சொல்லுவேன் என்பதால் சிலர் படம் ரெடி ஆகவில்லை என சொல்வார்கள். ஆனால் விஷ்ணு நேற்று எனக்கு தைரியமாக படத்தை காட்டி விட்டார்.