தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஈரம் போன்று ஒரு படத்தில் நடிக்க ஆசை - நடிகர் அருண்விஜய் - sinam movie trailer

’இயக்குநர் அறிவழகனிடம் அவர் இயக்கிய ’ஈரம்’ மாதிரி எனக்கு ஒரு ஸ்கிரிப்ட் செய்யுங்கள் எனக்கேட்டுள்ளேன்’ என நடிகர் அருண்விஜய் தெரிவித்துள்ளார்.

ஈரம் போன்று பேய்படம் கேட்டுள்ளேன்- நடிகர் அருண்விஜய்
ஈரம் போன்று பேய்படம் கேட்டுள்ளேன்- நடிகர் அருண்விஜய்

By

Published : Aug 31, 2022, 7:22 PM IST

நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ’சினம்’ படத்தின் ட்ரெய்லர் கேஜி திரையில் திரையிடப்பட்டது. இதனைக் காண நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை பல்லக் லால்வாணி வந்திருந்தனர். திரையரங்கில் ரசிகர்களைச் சந்தித்த அவர்கள் ’சினம்’ திரைப்படம் குறித்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் அருண் விஜய், '' 'யானை' பட வெற்றிக்குப் பிறகு 'சினம்' மூலமாக ரசிகர்களையும் பொதுமக்களையும் சந்திக்கிறொம். யானை-க்கு கோவையில் இருந்து தான் பட புரமோஷனை ஆரம்பித்தோம். அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

'சினம்' படத்திற்கும் முதலில் கோவையில் இருந்து தான் திரையரங்குகளில் புரொமோஷனை ஆரம்பிக்க வேண்டுமென விருப்பப்பட்டு தற்போது திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்து வருகின்றோம். வரவிருக்கும் 'சினம்' படமானது எல்லோரின் குடும்பத்தில் இருக்கின்ற ஒரு கோபத்தையும், அன்றாட வாழ்க்கையில் நாம் பார்ப்பதையும் கதை கருவாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமான விஷயத்தை வைத்துதான் சினத்தை நாங்கள் எடுத்துள்ளோம். என்னுடைய சாதாரண யதார்த்தமான கேரக்டர் இந்தப்படத்தில் உள்ளது. சாதாரண சப்-இன்ஸ்பெக்டர், அவனுக்கும் ஒரு குடும்பம், லவ் என இருக்கிறது. சூழ்நிலை அவனை வேறு இடத்திற்குக் கொண்டு செல்கிறது. அவன் எந்த இடத்தில் கோபம் அடைகிறான் என்பதை அழகாக இயக்குநர் அமைத்துள்ளார்.

செப்டம்பர் 16ஆம் தேதி சினத்தோடு திரையரங்குகளில் தங்களைப் பார்க்க வருகிறோம். ஒவ்வொரு படத்திற்கும் நீங்கள் வித்தியாசமான அனுபவ முயற்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளீர்கள். அதே போல், இந்த சினம் படமும் உங்களுக்கு நல்ல பொழுதுபோக்காக அமையும் வகையில் ஒரு ஸ்பெஷல் கன்டென்ட் ஆக இருக்கும்.

அதனால் தான், இந்தப் படத்தை நாங்கள் எடுத்தோம். ரியல் லொகேஷன் சென்று படம் எடுத்து உள்ளோம். தற்போது அனுமதி எங்கேயும் கொடுப்பதில்லை. இரண்டு மாதத்திற்கு முன்பு அனுமதி வாங்கி, படக் காட்சிகளை இயக்க செய்தோம். மேலும் நடிகை பல்லக் பற்றி கூறினால், அவருடைய கேரக்டர் நம்ம வீட்டிலுள்ளவர்களின் கதாபாத்திரம் போல் அமைந்துள்ளது.

இப்படி பல அழகான கேரக்டர்கள் இந்தப்படத்தில் உலா வரும். படத்தைப் பொறுத்தவரை யதார்த்தமாக இருக்கும். எனக்கு ஆக்சன் மூவி நன்றாக வருகிறது. கதையும் அதே போல வருகிறது. எமோஷனல் ஆன ஆக்சன் படமும் மக்களிடம் கொண்டு செல்கிறது. எனக்கும் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

ஜனவரியில் தான் எந்த படத்தையும் கமிட் செய்யவில்லை. நோய்த்தொற்று காலத்தில் 2 ஆண்டுகள் படம் எதுவும் வரவில்லை. நோய்த்தொற்று பாதிப்புகளைக் கடந்து அடுத்தடுத்து படங்கள் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன. திரில்லர் மற்றும் பேய் படங்களை இயக்குவதில் வல்லவர், இயக்குநர் அறிவழகன். அவரிடம் அவர் இயக்கிய ’ஈரம்’ மாதிரி எனக்கு ஒரு ஸ்கிரிப்ட் செய்யுங்கள் எனக்கேட்டுள்ளேன்” எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க:நீங்க தயிர் சாப்பிடுங்க, நாங்க பீஃப் சாப்டுறோம்... நடிகை துஷாரா விஜயன்

ABOUT THE AUTHOR

...view details