சென்னை :ஷிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள டேக் டைவர்ஷன் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பேரரசு மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய பேரரசு, “ தமிழ் சினிமாவில் மக்களை திரையரங்கிற்கு அழைத்து வர பெரிய நடிகர்கள் இருக்க வேண்டும் என்பது இல்லை. கதை நல்லதாக இருக்க வேண்டும். டேக் டைவர்ஷன் அருமையான தலைப்பு. புதிய இயக்குநர்கள், சிறிய நடிகர்களை வைத்து படத்தை வெற்றிபெற வைப்பதே இயக்குநரின் வெற்றி.
புதுமையான கதையை கொண்ட படம்தான் இங்கு வெற்றிபெறும். நான்கூட நல்ல இயக்குநர் கிடையாது. அந்த வெற்றி எல்லாம் மாயை. புதிய நடிகர்களை வைத்து வெற்றிபெறுவதுதான் உண்மையான வெற்றி. ஒரு இயக்குநராக பார்த்திபனுக்கு தலை வணங்குகிறேன்.