தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'நான் இப்போது வரை எனது பிள்ளைகளை எதிர்பார்த்து இல்லை' - விஷால் தந்தை ஜிகே ரெட்டி! - ஜி கே ரெட்டி

'பனாரஸ்' எனும் கன்னட படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாய கங்கா’ பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஜூன் 29) நடைபெற்றது.

'நான் எனது பிள்ளைகள் தயவில் இல்லை..!' - விஷால் தந்தை ஜிகே ரெட்டி!
'நான் எனது பிள்ளைகள் தயவில் இல்லை..!' - விஷால் தந்தை ஜிகே ரெட்டி!

By

Published : Jun 29, 2022, 10:03 PM IST

'பனாரஸ்' எனும் கன்னட படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாய கங்கா’ பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஜூன் 29) நடந்தது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சைத்கான் நாயகனாக நடித்துள்ளார். நடிகை சோனல் மாண்டீரோ நாயகியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் ஜெயதீர்தா இயக்கியுள்ளார்.

இவ்விழாவில் நடிகர் விஷாலின் அப்பா ஜிகே.ரெட்டி கலந்து கொண்டு பாடலை வெளியிட்டார். விழாவில் பேசிய நடிகர் சைத்கான், “தமிழில் எனக்கு நடிகர் விஜய் பிடிக்கும். தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் காதல் படங்களில் நடிக்க ஆசை” என்றார். மேலும் மேடையில் நாயகியுடன் பாடலுக்கு நடனமாடினார்‌.

இதனையடுத்து பேசிய தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி, “நான் 1964இல் சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்தவன். எனது தாத்தா ஆந்திராவில் இருந்தார். என் அப்பா பெங்களூரில் இருந்தார்‌. நான் சென்னையில் வாழ்ந்து வருகிறேன். விஷால் பெங்களூரில் பிறந்தாலும் இங்கு தான் இருக்கிறார். சினிமாவுக்கு சாதி, மதம், மொழி கிடையாது‌.

நான் இப்போது வரை எனது பிள்ளைகளை எதிர்பார்த்து இல்லை. என்னை நானே பார்த்துக்கொள்கிறேன். எல்லோருக்கும் உடல்நிலை தான் முக்கியம். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.

இதையும் படிங்க: ஜூலை 1 வெளியாகும் ‘பத்தல பத்தல’ பாடல் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details