தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சி.வி.குமார் தயாரிக்கும் ‘ஹைன’ படத்தின் பூஜை - ஹைனா திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி.குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரஷாந்த் சந்தர் இயக்கத்தில் உருவாகவுள்ள 'ஹைனா' திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

சி.வி.குமார் தயாரிக்கும் புதிய படம் ஹைனா!
சி.வி.குமார் தயாரிக்கும் புதிய படம் ஹைனா!

By

Published : Oct 22, 2022, 10:19 PM IST

சென்னை:தமிழ் சினிமாவில் நல்லகதையம்சம் கொண்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி. குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரஷாந்த் சந்தர் இயக்கத்தில் உருவாகவுள்ள 'ஹைனா' திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

இப்படத்தினை சமத்துவ மக்கள் கழக இளைஞரணி தலைவர் கார்த்திக் நாராயணன் குத்துவிளக்கேற்றி, கிளாப் அடித்து துவக்கி வைக்க, (வி-ஸ்குயர் என்டர்டெயின்மெண்ட்) விஸ்வநாதன் விழாவில் கலந்து கொண்டு குழுவினரை வாழ்த்தினார்.

'ஹைனா' என்றால் வேட்டையாடும் மிருகமான கழுதைப்புலி என்பதால், பெயருக்கேற்றார் போல் திடீர் திருப்பங்களுடன் கூடிய விறுவிறுப்பான திரில்லர் படமாக அமையவுள்ள 'ஹைனாவில்' பிரஜன், அருண், ரியா, பிரியாலயா, லிப்ரா ரவீந்திரன், ரித்திகா, ஷோபனா, சைவம் ரவி, ரிஸு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தை பற்றி இயக்குநர் பிரஷாந்த் சந்தர் கூறுகையில், "இது முழுக்க முழுக்க ஒரு திரில்லர் திரைப்படமாக இருக்கும். இப்படத்தில் எதிர்பாராத விதமாக பல திருப்பங்கள் நிறைந்திருக்கும். படத்தின் மூலக்கதை மாயையை மையப்படுத்தி இருக்கும்," என்றார்.

தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சி.வி. குமாரிடம் 'கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தில் இணை இயக்குநராக பிரஷாந்த் சந்தர் பணியாற்றியுள்ளார்.

"எனது குருநாதரின் தயாரிப்பிலேயே முதல் படத்தை இயக்குவது மிகவும் பெருமையாக உள்ளது. திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது தசாப்தத்தில் இது மிக முக்கியமான படமாக இருக்கும்," என்று இயக்குநர் பிரஷாந்த் சந்தர் கூறினார்.

இந்த படத்தின் எழுத்தாளர் நிர்மல் குமார் ஆவார், கலை இயக்குநராக எஸ்.கே பணியாற்றவுள்ளார், படத்தொகுப்பு பணிகளை பி.கே மேற்கொள்கிறார், சண்டை பயிற்சி பணிகளை ராஜேஷ் கண்ணன் செய்கிறார். இப்படத்திற்கு இசையமைக்கிறார் ஹரி இப்படத்திற்க்கு ஆடை அமைப்பாளர் ரெபேக்கா வடிவமைப்பாளராக பணிபுரிகிறார்.

ஒளிப்பதிவு பணிகளை ஏ.எஸ் சூர்யா மேற்கொள்கிறார். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி. குமார் தயாரிக்கும் 'ஹைனா' படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என்று இயக்குநர் பிரஷாந்த் சந்தர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் 'வீர சிம்ஹா ரெட்டி'!

ABOUT THE AUTHOR

...view details