சென்னை:தமிழ் சினிமாவில் இன்று வரைக்கும் யாராலும் அசைக்க முடியாத நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது, படங்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கொண்டாடும் விதமாக இருக்கும். 'அண்ணாத்த' படத்திற்குப் பிறகு தற்போது, 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார்.
மேலும், இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன் லால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யை வைத்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் சரியாக போகாததால், இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினியை வைத்து இயக்குவதால் மனதளவில் நெல்சனுக்கு சவாலானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் 'லால் சலாம்' என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இதனையடுத்து ரஜினிகாந்தின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிப்பார் என்று பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதனும் பட்டியலில் உள்ளார். ஆனால், இவர்களை எல்லோரையும் மீறி இன்னொருவர் பெயர் அடிபடுகிறது. கிட்டத்தட்ட உறுதி என்கின்றனர்.