தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

காமெடி படங்களுக்கு சப்போர்ட் செய்யுங்கள் - இயக்குநர் ரவிமரியா! - ரவி மரியா

நடிகர் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் , சதீஷ், ரவி மரியா நடிப்பில் தயாராகியுள்ள 'ஹாஸ்டல்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

காமெடி படங்களுக்கு சப்போர்ட் செய்யுங்கள் - இயக்குனர் ரவிமரியா!
காமெடி படங்களுக்கு சப்போர்ட் செய்யுங்கள் - இயக்குனர் ரவிமரியா!

By

Published : Apr 19, 2022, 4:33 PM IST

சென்னை:அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், க்ரிஷ், சதீஷ், நாசர், முனீஷ்காந்த், யோகி உள்ளிட்டோர் நடித்துள்ள ’ஹாஸ்டல்’ திரைப்படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ், க்ரிஷ், யோகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய நடிகர் சதீஷ், “ஜாலியாக வேலை பார்த்த படம். நான் ஹாஸ்டலில் தங்கி படித்தது இல்லை. நண்பர்களின் ஹாஸ்டலில் தங்கிய பழைய நினைவுகளை கூறும் படமாக வந்துள்ளது. இப்படத்தில் இருந்து பிரியா பவானி சங்கர் என்ற நல்ல நண்பர் கிடைத்துள்ளார். மகளிர் மட்டும் படத்திற்குப் பிறகு, நாசர் நல்ல காமெடி கதாபாத்திரம் இதில் செய்துள்ளார். போர் அடிக்காத படமாக இருக்கும்” எனப் பேசினார்.

நடிகர் மற்றும் இயக்குநர் ரவிமரியா பேசுகையில், “காமெடி படங்களுக்கு சப்போர்ட் செய்ய இங்குள்ள இயக்குநர்கள் தயாராக இல்லை. காமெடி சினிமா என்பது ஒரு சுவைதான். இதனை இரண்டாவது இடத்திற்குத் தள்ளாதீர்கள். நல்ல சினிமாவை தயவுசெய்து போற்றுங்கள்” எனக் கூறினார்.

நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், ”ரீமேக் படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்தேன். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் நம்பிக்கையால் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். முதன்முறையாக இப்படத்தில் நடனம் ஆடியுள்ளேன். முழுநீள காமெடி படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது. காமெடி படம் எடுப்பது மிகவும் சிரமம். ரவிமரியாவின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்” எனப் பேசினார்.

இதையும் படிங்க: மீண்டும் இணைந்த பிரபுதேவா - வடிவேலு கூட்டணி!

ABOUT THE AUTHOR

...view details