தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்... குவியும் வாழ்த்து... - கௌரவ டாக்டர் பட்டம்

சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 31ஆவது பட்டமளிப்பு விழாவில், 150 படங்களுக்கும் மேல் இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்; டாக்டர் யுவனுக்கு ரசிகர்கள் வாழ்த்து
யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்; டாக்டர் யுவனுக்கு ரசிகர்கள் வாழ்த்து

By

Published : Sep 3, 2022, 2:08 PM IST

சென்னை:செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர் நிலை பல்கலைகழகத்தின் 31ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மரிய ஜான்சன் தலைமையில் இன்று (செப் 3) நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக (DRDO) இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய ராணுவ அமைச்சரின் அறிவியல் ஆலோசகருமானை டாக்டர்.சதீஷ் ரெட்டி பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.

இந்த விழாவில் திரைப்படத்துறையில் 25 ஆண்டுகளுக்குள் 150 படங்களுக்கும் மேல் இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதேபோல் மத்திய ராணுவத்திற்கு எடை குறைவான அர்ஜுன் ராணுவ டேங்க்கை வடிவமைத்த சாதனை விஞ்ஞானி வி. பாலகுருவுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இவர் ஏற்கனவே இருந்த அர்ஜுன் டேங்கில் 5 முக்கிய மாற்றங்களையும் 25 சிறு வசதிகளையும் மேம்படுத்தி திறமையாக செயல்படும் நவீன ரக ராணுவ டேங்காக மாற்றினார். மேலும் இந்த 31 வது பட்டமளிப்பு விழாவில் 2,258 இளங்கலை பட்டதாரி மாணவர்களுக்கும், 409 மேல்நிலைப் பட்டதாரி மாணவர்களுக்கும், 153 பிஎச்டி மாணவர்களுக்கும் உள்ளிட்டோருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதனிடையே யுவன் சங்கர் ராஜாவுக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:திருமண வரவேற்பு விழாவில் போன் செய்த நடிகர் சூர்யா... நெகிழ்ந்த தம்பதி...

ABOUT THE AUTHOR

...view details