தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தின் 5 கலக்கலான பாடல்கள்! - தனுஷின் வாத்தி

தனுஷ் நடிப்பில் 'வாத்தி' திரைப்படத்தின் 5 கலக்கலான பாடல்கள் இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Vaaththi play list now:தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தின் 5 கலக்கலான பாடல்கள் அப்டேட் இதோ
Vaaththi play list now:தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தின் 5 கலக்கலான பாடல்கள் அப்டேட் இதோ

By

Published : Feb 4, 2023, 9:32 PM IST

சென்னை: இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘வாத்தி’. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனைத் தமிழில் 'வாத்தி' என்ற பெயரிலும், தெலுங்கில் 'சார்' என்ற பெயரிலும் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் நாக வம்சி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இப்படம் இம்மாதம் 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் Body:இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இந்த விழா நடக்கிறது. Conclusion:இன்று பாடல்களும் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகும் முதல் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:காதலனை கரம் பிடித்த பாலிவுட் நடிகை சித்ராஷி ராவத்

ABOUT THE AUTHOR

...view details