தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மறைந்தார் ’ஹாக்ரிட்’...! ; ஹாரிபாட்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் உயிரிழப்பு - ஹாக்ரிட்

ஹாரிபாட்டரில் புகழ்பெற்ற ’ஹாக்ரிட்’ கதாபாத்திரத்தில் நடித்த நடிகரும் நகைச்சுவையாளருமான ராபி கால்ட்ரான் காலமானார்.

மறைந்தார் ’ஹாக்ரிட்’...! ; ஹாரிபாட்டர் படத்தில் ஹாக்ரிட் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மரணம்
மறைந்தார் ’ஹாக்ரிட்’...! ; ஹாரிபாட்டர் படத்தில் ஹாக்ரிட் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மரணம்

By

Published : Oct 15, 2022, 11:06 AM IST

லண்டன்:ஹாரிபாட்டர் படங்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ’ருபியஸ் ஹாக்ரிட்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்காட்டிஷ் நடிகரான ராபி கோல்ட்ரான் மறைந்தார். இவருக்கு வயது 72. இவர் ஹாரி பாட்டர் திரைப்படங்களில் 2001ஆம் ஆண்டு வெளியான ‘ஸொர்செரர்ஸ் ஸ்டோன்’ திரைப்படத்திலிருந்து 2011ஆம் ஆண்டு வெளியான ‘டெட்லி ஹாலோஸ்; பார்ட் 2’ திரைப்படம் வரை இடம்பெற்றார். இவர் அந்தக் கதையிலேயே அனைவராலும் மிகவும் விரும்பப்பட்ட கதாபாத்திரமாகும்.

இவர் ஹாரிபாட்டர் சீரீஸ் மற்றுமின்றி ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில், நடந்த ஒரு ரீயூனியன் விழாவில், மற்ற ஹாரிபாட்டர் நட்சத்திரங்களுடன் ராபி கோல்ட்ரானும் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், “ திரைப்படங்களின் சிறப்பு என்னவென்றால் என் குழந்தைகளின் தலைமுறை அவர்களின் தலைமுறைக்கு இதை காண்பிக்கும்.

இதை 50 ஆண்டுகள் கழித்தும் கூட பார்க்கலாம். நான் அப்போது இருக்க மாட்டேன், ஆனால் ஹாக்ரிட் இருப்பான்” எனப் பேசினார். தற்போது அவரது மறைவிற்கு அவரது ரசிகர்களும் திரைத்துறையினரும் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜேம்ஸ் பாண்ட் போன்று இந்தியன் ஸ்பை த்ரில்லர் படம் சர்தார் - நடிகர் கார்த்தி

ABOUT THE AUTHOR

...view details