வாஷிங்டன்:பழம்பெரும் அமெரிக்க நடிகர் ஹாரிசன் ஃபோர்டு மார்வல் யூனிவெர்சில் உருவாகும் ‘கேப்டன் அமெரிக்கா: நியூ வார்ல்டு ஆர்டர்’ படத்தில் வில்லியம் ஹர்டிற்கு பதிலாக தடியஸ் தண்டர் போல்ட் ரோஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்வெலின் வில்லன்கள் படையெடுக்கும் திரைப்படமான ‘தண்டர்போல்ட்ஸ்’ திரைப்படத்திலும் நடிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம், ’கேப்டன் அமெரிக்கா - 4’ - ற்கு பிறகு எடுக்கப்படும்.
இயக்குநர் ஜூலியஸ் ஒனாஹ் இந்த நான்காவது கேப்டன் அமெரிக்கா திரைப்படத்தில் ’தி ஃபால்கன் அண்டு தி விண்டர் சோல்ஜர்’ தொடருக்குப் பின்பு நடந்த சம்பவங்கள் இடம்பெறும் எனத் தெரிகிறது. பழம்பெரும் நடிகர் ஃபோர்டுவின் முதல் மார்வெல் யூனிவெர்ஸ் திரைப்படம் இதுவாகும்.
80 வயது நிரம்பிய இவர், ‘ஸ்டார் வார்ஸ்’ , ‘ஜாக் ரியான்’, ‘இந்தியான ஜோன்ஸ்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரின் அடுத்த படமான ஐந்தாவது ‘இந்தியா ஜோன்ஸ்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “தசரா” திரைப்படம் - கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்