தமிழ் சினிமாவில் 'சாக்லெட் பாய்' ஹீரோக்களில் தனக்கென தனியிடம் பிடித்து நிலைத்து வருபவர், நடிகர் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழச்சிக்கு பிறகு பல்வேறு வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட படங்களில் நடித்து வரும் இவர், இன்று தனது வாழ்க்கை துணை குறித்த அறிவிப்பினை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே எந்த நிபந்தனைகளும் அற்ற அன்பையும் பாசத்தையும் என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. என்னுடைய ஒவ்வொரு சிறிய கனவையும் என் பெற்றோர் ஊக்குவித்தார்கள், அதே போலவே இப்போது நீங்கள் அனைவரும் எனக்கு மிகவும் அன்பையும் ஆதரவையும் காட்டி வருகிறீர்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் சினிமா உலகில் எனது சிறு சிறு வெற்றிகளை பதிக்க உதவியவர்கள். ஒவ்வொரு வெற்றியையும் மைல்கல்லையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வது எனது பயணத்தின் மிகவும் திருப்திகரமான பகுதியாகும்.
இப்போது, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன்.