தமிழ்சினிமாவின் கடந்த 10 ஆண்டு காலகட்டத்தில் அறிமுகமான 'சாக்லெட் பாய்' ஹீரோக்களில் தனக்கென தனியிடம் பிடித்து நிலைத்து வருபவர் தான், நடிகர் ஹரிஷ் கல்யாண். அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து வந்த ஹரிஷ் கல்யாண், தற்போது தசரா பண்டிகையை முன்னிட்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்க்கை குறித்த அறிவிப்பினை வெளிவிடும் தொனியில் பதிவு ஒன்றையிட்டுள்ளார்.
ஓர் பெண்ணின் கையைக் கோர்த்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ‘மங்களகரமான தொடக்கங்களை நோக்கி’ எனப் பதிவிட்டுள்ளார். இது அவரது கல்யாணம் குறித்த அறிவிப்பு என அவரது பதிவின்கீழ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இவருக்கு யார் ஜோடி எனப் பலரும் பேசி வரும் நிலையில், சில பேர் அது நடிகை பிரியா பவானி சங்கரின் கை தான் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.