சென்னை:ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள திரைப்படம் 'பார்க்கிங்' (Parking). இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் (Passion Studios) தயாரித்துள்ளது. சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படம். கடந்த டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மிக்ஜாம் புயல் காரணமாக, படத்தின் வசூல் சிறிது பாதிக்கப்பட்டாலும், நல்ல படம் என்று பெயர் எடுத்துள்ளது. இதில் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு பேசப்பட்டது. இந்த நிலையில், பார்க்கிங் திரைப்படத்தின் வெற்றி விழா, சென்னை வடபழனி பிரசாத் லேபில் இன்று (டிச.16) நடைபெற்றது.
இவ்விழாவில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா, இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழா மேடையில் பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண், 'படத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்த மீடியாவுக்கு நன்றி. இதன் வெற்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. பார்வையாளர்களை தியேட்டரில் நேரில் சந்தித்தோம்.
இந்தப் படத்தை எல்லோரும் அப்படி கொண்டாடினார்கள். இந்த வருடத்தின் 'ஹிட்' படங்களில் இது நிச்சயம் இருக்கும் என பலரும் சொன்னார்கள். நீங்கள் கொடுத்த அன்பால்தான் இங்கு நிற்கிறோம். இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநர் ராம், தயாரிப்பாளர் சினிஸ், சுதன் ஆகியோருக்கு நன்றி. வெற்றி இயக்குநர் பட்டியலில் ராம் நிச்சயம் இருப்பார்.