தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வரவேற்புபெற்ற ஹாரிஸ் ஜெயராஜின் 'வாடி வாடி' பாடல்! - வாடி வாடி பாடல்

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள முதல் தனியிசைப் பாடலான 'வாடி வாடி' பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

வரவேற்பு பெற்ற ஹாரிஸ் ஜெயராஜின் 'வாடி வாடி' பாடல்!
வரவேற்பு பெற்ற ஹாரிஸ் ஜெயராஜின் 'வாடி வாடி' பாடல்!

By

Published : Jul 1, 2022, 5:42 PM IST

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முதல் சுயாதீன ஆல்பம் பாடலான 'வாடி வாடி' பாடல் வெளியானது. இப்பாடல் அதன் அற்புதமான இசை மற்றும் அசத்தலான காட்சிகளுக்காக ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறது. இந்தப் பாடல் வெளியானதில் இருந்தே ரசிகர்களிடம் பாடலுக்கான வரவேற்பு அமோகமாக உள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான இசைக்கோர்வை மற்றும் விவேகாவின் நவநாகரிகப்பாடல் வரிகள் ரசிகர்களை ஈர்க்கும் அம்சமாக அமைந்துள்ளன. இந்தப் பாடல் வீடியோவில், நடிகர்கள் அஸ்வின் குமார், லக்ஷ்மிகாந்தன் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் இந்தப்பாடலுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், தமிழ் ஆல்பங்களிலேயே மிக பிரமாண்டமாக படமாக்கப்பட்ட முதல் தமிழ் பாடல் வீடியோ ‘வாடி வாடி’ என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ‘வாடி வாடி' பாடலை இயக்குநர் கார்த்திக் அரசகுமார் இயக்கியுள்ளார்.

இந்தப் பாடலுக்கு நடன இயக்குநர் சாண்டி நடனம் அமைத்துள்ளார். இந்தப் பாடலில் நடித்த நடிகர் அஷ்வின் சில மாதங்களுக்கு முன்பு, தன் பேச்சால் சில தரப்பினரின் வெறுப்புகளை சம்பாதித்திருந்த நிலையில், அவர் நடித்துள்ள இந்தப் பாடல் தற்போது வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டிச.14 முதல் சிம்புவின் 'பத்து தல'..!

ABOUT THE AUTHOR

...view details