தென்னிந்திய திரைத்துறையின் இளம் ஹீரோ தேஜா சஜ்ஜா மற்றும் கிரியேட்டிவ் இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் முதல் பான்-இந்திய சூப்பர் ஹீரோ படமான ஹனு-மான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் முன்னணி நட்சத்திரம் 'பல்லாலதேவா ராணா டகுபதி' இத்திரைப்படத்தில் இருந்து மைக்கேல் பாத்திரத்தின் லுக்கை வெளியிட்டுள்ளார்.
தனித்தன்மையுடன் தயாரிக்கப்பட்ட நீண்ட உடையில், மைக்கேல் ஆன வினய் ராய், கனரக இயந்திரத் துப்பாக்கிகளை ஏந்திச் செல்லும் தனது சொந்த ராணுவ வீரர்களுடன், இயந்திர வெளவால்களின் கண்காணிப்பில், ஒரு கோயிலின் முன் மூர்க்கமாக நடந்து செல்வதை இந்த புரொமோவில் ரசிகர்கள் காணலாம்.
வினய் ராய் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கேஸ் மாஸ்க் மற்றும் கொள்ளையனுக்குண்டான ’ஐ பேட்ச்’ அணிந்துள்ளார். இது ஒட்டுமொத்த தோற்றத்திற்கும் மேலும் மிருகத்தனத்தை சேர்க்கிறது. வினய் ராய் எனும் மைக்கேல் தனது முதல் தோற்றத்திலேயே ரசிகர்களை பயமுறுத்துகிறார்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல நட்சத்திரங்கள் மற்றும் உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். இப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இதையும் படிங்க: 'யார் அவள்' தனியிசைப் பாடல் வீடியோ வெளியீடு