தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இன்ஸ்டாகிராமில் வந்த மெசேஜ்... அதிர்ந்துபோன நடிகை ஷாலு ஷம்மு... ஹேக்கர்கள் ஜாக்கிரதை...

நடிகை ஷாலு ஷம்முவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்க முயற்சி செய்த ஹேக்கர் கும்பல் குறித்து, தனது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஷம்மு எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

hack attempt actress shalu shamu instagram
hack attempt actress shalu shamu instagram

By

Published : Apr 12, 2022, 2:11 PM IST

Updated : Apr 12, 2022, 5:43 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகரித்துவிட்டன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மோசடி கும்பல்களும் நூதன முறையில் குற்றங்களை செய்துகொண்டேவருகிறது. குறிப்பாக சினிமா, அரசியல் பிரபலங்கள் போலவே ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் கணக்குகளை போலியாக உருவாக்கி, பண மோசடி நடத்திவருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் 6.5 லட்சம் பாலோயர்ஸ்களை வைத்துள்ள நடிகை ஷாலு ஷம்முவின் பக்கத்தை முடக்க முயற்சி நடந்துள்ளது.

இதுகுறித்து ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவை இட்டு, தனது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார். அந்த பதிவில், "நான் எனக்கு வந்த மெசேஜ் குறித்து இரண்டு ஸ்கீரின்ஷாட்களை பதிவிடுகிறேன். இது அனைவருக்கும் முக்கியமானது. ஒரு நிமிடம் தயவுசெய்து படிக்கவும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஷாலு ஷம்முவிடம் மேக்கப் கலைஞராக பணிபுரிந்த உமா இன்ஸ்டாகிாரம் ஐடியிலிருந்து ஷம்முவிற்கு மெசேஜ் வருகிறது. அதில், தனது ஃபேஸ்புக் கணக்கை புதிய மொபைலில் லாகின் செய்ய முடியவில்லை. தன்னுடைய இ-மெயில் ஐடியை உங்களுக்கு அனுப்புகிறேன். அதனை உங்கள் போனில் லாகின் செய்து, உங்களுக்கு வரும் கோட் எண்ணை தெரிவிக்குமாறும் கூறுகிறார். இதனால் சந்தேகமடைந்த ஷாலு ஷம்மு உடனே உமாவிற்கு போன் செய்கிறார்.

நடிகை ஷாலு ஷம்மு

ஆனால், உமா தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கிறார். அப்போதுதான் ஹேக்கர் கும்பல் உமாவின் பெயரில் மோசடி செய்ய முயற்சி செய்தது தெரியவருகிறது. இதுகுறித்து ஷாலு ஷம்மு, "மக்களே.. யாரேனும் இப்படிச் செய்யுமாறு கேட்டுக் கொண்டால், தயவுசெய்து செய்யாதீர்கள். அப்படி செய்தால், உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்படுவிடும். எனவே பாதுகாப்பாக இருங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மீரா மிதுன் மீது புகார் அளித்த சிவகார்த்திகேயன் பட நடிகை!

Last Updated : Apr 12, 2022, 5:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details