90’ஸ் கிட்ஸ்களின் பால்ய நினைவுகளில் நீங்காதிருக்கும் ஓர் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் ’பாட்டுக்கு பாட்டு’ நிகழ்ச்சியும் ஒன்று. அதில் தொகுப்பாளரான அப்துல் ஹமீதின் குரலும், உடல்மொழியும் இன்னும் அனைவரின் மனதிலும் அழியாது பதிந்திருக்கும்.
90’ஸ் கிட்ஸ் ஃபேவரேட் ’பாட்டுக்கு பாட்டு’ அப்துல் ஹமீதுடன் ஜீவிபிரகாஷ் - பாட்டுக்கு பாட்டு
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமணத்திற்கு வருகைத் தந்த ’பாட்டுக்கு பாட்டு’ தொலைக்காட்சி நிகழ்ச்சி புகழ் அப்துல் ஹமீதுடன் இசையமைப்பாளர் ஜீ.வி பிரகாஷ்குமார் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று(ஜூன் 10 ) நடந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமண நிகழ்ச்சியில் அப்துல் ஹமீது கலந்து கொண்டார். அப்போது அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் குமார், அந்தப் புகைப்படத்துடன் சேர்த்து 27 வருடங்களுக்கு முன்பு அவருடன் எடுத்த புகைப்படத்தையும் சேர்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது பால்ய நினைவுகளை நினைவுகூர்ந்துள்ளார் ஜீ.வி.பிரகாஷ் குமார்.
இதையும் படிங்க: ’மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’ - ஏ.ஆர். ரகுமான்