சென்னை: நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர். தற்போது நிறைய படங்களில் நடித்தும், இசையமைத்தும் வருகிறார். இவரது இசையில் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்', விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' உள்ளிட்ட படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
மேலும், ஜி.வி.பிரகாஷ் குமார் பொது விஷயங்களிலும் தனது கருத்துக்களை அவ்வப்போது பகிர்ந்து வருபவர். சமூகத்தில் நிலவும் அநியாயங்களுக்கு குரல் கொடுப்பதும், அவ்வப்போது உதவி கேட்போருக்கு தன்னால் முடிந்தவரை உதவிகள் செய்தும் வருகிறார். இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஒருவர் தங்களது 1 வயது குழந்தைக்கு மூளையில் கட்டி இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், உதவி கேட்டு சமூக வலைத்தளமான 'X' தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், “ஆன்லைன்ல பண உதவி கேக்குறதுக்கு பயமா இருக்கு, இருந்தாலும் கேக்குறேன். என் அக்கா பையனுக்கு (1 வயசு) சிறு மூளை பக்கத்துல கட்டி இருக்குன்னு சொல்றாங்க. கொஞ்சம் பயமா தான் இருக்கு. நேத்து நைட்டு இராம்நாட்ல இருந்து மதுரை அப்போலோ (Apollo) ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனோம். ஆனா அவங்க என்னன்னா உடனே ஆப்பரேஷன் பன்னனும்னு சொல்றாங்க. 3.5 To 4 லட்சம் வரை ஆகும்னு சொல்றாங்க.