ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் ஜீவி.பிரகாஷ்குமார், மகிமா நம்பியார், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'ஐங்கரன்'. எப்போதோ தயாரான இப்படம் பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து நேற்று(மே 5) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டு அவர்கள் மத்தியில் பாராட்டுக்களை இப்படம் பெற்றுள்ளது.
மீண்டும் தள்ளிப்போன ஜி.வி.பிரகாஷின் ஐங்கரன்..! - ஜிவி பிரகாஷ்குமார்
ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஐங்கரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
![மீண்டும் தள்ளிப்போன ஜி.வி.பிரகாஷின் ஐங்கரன்..! மீண்டும் தள்ளிப்போன ஜி.வி.பிரகாஷின் ஐயங்கரன்..!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15211610-thumbnail-3x2-iyangaran.jpg)
மீண்டும் தள்ளிப்போன ஜி.வி.பிரகாஷின் ஐயங்கரன்..!
இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து படக்குழு தரப்பில் தெரிவித்துள்ளதாவது, “அனைவரின் ஏகோபித்த ஆதரவையும், பாராட்டையும் பெற்ற 5 ஆம் தேதி ரிலீஸாக இருந்த "ஐங்கரன்" படம் குறைவான தியேட்டர் கிடைத்ததால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகிறது” என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'வாவ் விட்டாச்சு லீவு...' பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தேதி அறிவிப்பு!