தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தமிழுக்காகப் போராடிச் செத்தவன் ஒருத்தன் இருக்கான்..! அனல் பறக்கும் “ரெபல்” படத்தின் டீசர் வெளியீடு..! - Rebel Teaser Tamil

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ரெபல்' படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

gv prakash kumar rebel movie teaser released by actor surya
ரெபல் படத்தின் டீசர் வெளியீடு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2023, 2:01 PM IST

சென்னை: இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து, கதையின் நாயகனாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெபல்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

'ரெபல்' படத்தின் டீசர் வெளியான சிறிது நேரத்திலேயே அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ், ஆதித்யா பாஸ்கர், 'கல்லூரி' வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டுள்ளார். உண்மை சம்பவங்களைத் தழுவி அதிரடி ஆக்சன் படமாகத் தயாராகி இருக்கும் 'ரெபல்' திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் நேற்று டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் கதையின் நாயகனான ஜீ.வி.பிரகாஷ் குமாரின் தோற்றமும், ஆவேசமான கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

இதையும் படிங்க: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் குறித்து மெய் சிலிர்த்த எஸ்.ஜே.சூர்யா!

ABOUT THE AUTHOR

...view details