தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஜி.வி.பிரகாஷ் - பாரதிராஜா காம்போவில் உருவாகும் கள்வன்.. ஹங்கேரியில் பின்னணி இசை தயாரிப்பு!

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் - பாரதிராஜா நடிக்கும் 'கள்வன்' படத்தின் பின்னணி இசை ஹங்கேரியில் உருவாகி வருகிறது.

Kalvan
Kalvan

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 3:30 PM IST

சென்னை:ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'கள்வன்' திரைப்படம், 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், படத்தின் பின்னணி இசையை இசையமைப்பாளர் ரேவா, ஹங்கேரி நாட்டில் உருவாக்கி வருகிறார். இது குறித்து இசையமைப்பாளர் ரேவா கூறும்போது, "அற்புதமான பல திறமைசாலிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது பெருமையாக இருக்கிறது.

இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் டில்லி பாபு, பிவி ஷங்கர் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோருக்கு நன்றி. ஜி.வி.பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் பலர் நடித்துள்ள ‘கள்வன்’ படத்தின் பின்னணி இசையமைப்பது மிகவும் சவாலானது.

இந்தப் படத்தின் கதை மூலம், இசையில் பல ஆக்கப்பூர்வமான விஷயங்களைக் கற்றுக் கொள்ள எங்களுக்கு வாய்ப்பு வழங்கியது. உணர்வுகள் இந்தப் படத்தின் மையமாக இருப்பதால், அதற்கான இசையைக் கொடுத்துள்ளோம். எனது பின்னணி இசைக்கு ரசிகர்கள் எப்படியான வரவேற்பை கொடுக்கப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்" என்றார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், 'கள்வன்' படத்தின் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கியுள்ளார். ஏற்கனவே, இயக்குநர் பாலாவின் 'நாச்சியார்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா இருவரும் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் இன்னும் சில நடிகர்கள் நட்சத்திரக் குழுவில் ஒரு பகுதியாக உள்ளனர்.

இதையும் படிங்க:ஆஸ்கரிலிருந்து வெளியேறியது '2018 Everyone is a Hero'.. வெற்றியின் பக்கத்தில் பார்பி!

ABOUT THE AUTHOR

...view details