தமிழ்நாடு அரசின் ‘அரசுப் பள்ளியில் மாதம் ஒரு திரைப்படம்’ என்கிற திட்டத்தின்படி முதலில் சார்லி சாப்ளினின் ‘தி கிட்’ திரைப்படம் பள்ளி மாணவர்களுக்குத் திரையிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று (செப்.1) வாலாஜாபாத் அரசு பெண்கள் பள்ளியில் இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய ஈரானிய திரைப்படமான 'Children of Heaven' திரையிடப்பட்டது.
பள்ளி மாணவிகள் கொண்டாடிய 'Children of Heaven'! - இயக்குநர் மிஷ்கின்
தமிழ்நாடு அரசின் சமீபத்திய முன்னெடுப்பான 'அரசுப்பள்ளிகளில் மாதம் ஒரு திரைப்படம்' என்ற திட்டத்தின் படி இன்று(செப்.1) அரசுப்பள்ளி மாணவிகளுக்கு ஈரானிய திரைப்படமான 'Children of Heaven' திரையிடப்பட்டது.
பள்ளி மாணவிகள் கொண்டாடிய ‘Children of heaven'..!
இதில் இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டு பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடினார். மிஷ்கினிடம் குழந்தைகள் கேள்விகள் கேட்க, நீண்ட கலந்துரையாடல் நடந்தது. உரையாடலின் இடையில் ஆரம்பித்த மழை கடைசி வரை பெய்ய, "இந்த உன்னதமான படத்தைப் பார்த்த மாணவர்கள் நீங்கள் அனைவரும் சொர்க்கத்தின் குழந்தைகள் தான்" என்று உரையை முடித்தார், மிஷ்கின்.
இதையும் படிங்க: டூப் இல்லாமல் கிஷோரிடம் சண்டை போட்ட குங்ஃபூ மாஸ்டருக்கு பாராட்டு
Last Updated : Sep 2, 2022, 3:57 PM IST