இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது தான் இயக்கி கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ’விக்ரம்’ படத்தின் வெற்றியையடுத்து விஜயின் பெயரிடப்படாத ‘தளபதி 67’ திரைப்படத்தை இயக்கவுள்ளார். அதன் வேலைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது தான் சிறிது காலம் சமூகவலைதளங்களில் இருந்து விலகி இருக்கப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், மீண்டும் தான் வரும்போது அடுத்த படத்தின் அப்டேட்டுடன் வருவதாகவும் தெரிவித்துள்ளார். இவரது இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் கீழே வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.