சென்னை:இந்திய திரைத்துறையில் 10 ஆயிரத்துக்கும் மேல் பாடல்கள் பாடிய மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 78. 1945ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தவர் வாணி ஜெயராமனின் இயற்பெயர் கலைவாணி. இவர் சிறுவயதிலேயே இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தனது இனிமையான குரலால் திரையுலகில் வானுயர வளர்ந்து நிற்பவர். இவர், டி.ஆர்.பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடகாவில் இசையைப் பயின்றவர் ஆவார். வானொலியில், போடப்படும் பாடல்களைக் கேட்டுக் கேட்டு தானும் ஒரு பாடகியாக வேண்டும் என்கிற ஆசையை மனதில் வைத்து அதன்படி சாதித்தும் காட்டியவர்.
இசை மீது வாணி ஜெயராமுக்கு இருந்த தீரா காதல் இவரை இந்திய அளவில் புகழ்மிக்க பாடகியாக மாற்றியது. ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னர், ஒரு ஆண் இருப்பர் என்பது வாணி ஜெயராம் (Vani Jayaram) விஷயத்தில் 100 சதவீதம் உண்மை. மனைவியின் பாடகி ஆசையை நிறைவேற்றப் பக்க பலமாய் நின்றார் அவரின் கணவர் ஜெயராம்.
1971-ம் வருடம் வெளிவந்த ‘குட்டி’ என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசையில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் வாணி ஜெயராம். இவரது முதல் பாடலே அமோக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர்களால் தேடப்படும், முன்னணி பாடகியாக உருவெடுத்தார்.
இந்தியைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குஜராத்தி, ஒடியா, செங்காலி என 10க்கும் மேற்பட்ட மொழிப் பாடங்களைப் பாடி பிரபலமானார். 1974-ல் முதல் முறையாகத் தீர்க்கசுமங்கலி என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான அவர்,
- நித்தம் நித்தம் நெல்லு சோறு
- மல்லிகை என் மன்னன் மயங்கும்
- என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன்
- ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
- என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்
- வேறு இடம் தேடிப் போவாளே
உள்ளிட்ட 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர்.
தமிழில் திரைத்துறையில் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியவர்.
தேசிய விருதுகள்
1975- தேசிய விருது - சில பாடல்கள் - (ஆபூர்வ ராகங்கள்)